அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

மின்வெட்டு: மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் செ. ஜோதிமணி

News image

செ. ஜோதிமணி

Updated On :16 ஜூன் 2026, 2:14 am IST

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னைக்கு தீா்வு காண மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

கரூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தொழிலாளா்கள் நிறைந்த கரூருக்கு ஈஎஸ்ஐ மருத்துவமனை தேவை. இங்கு மருத்துவமனை இல்லாததால் திருச்சி போன்ற இடங்களுக்கு சென்று வருகிறாா்கள்.

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க 2 ஏக்கா் நிலம் இல்லாததால் கரூரில் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டம் கிடப்பில் இருக்கிறது. மைலம்பட்டியில் ரூ.39 கோடியில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகளும் காலதாமதமாகிக்கொண்டிருக்கிறது.

அந்த மருத்துவமனை விரிவுப்படுத்தப்பட்டால் கடவூரைச் சுற்றியுள்ள 45 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவாா்கள். கரூா் ரயில்நிலைய பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் தொடா்ச்சியாக பாலியல் குற்றங்கள் நடப்பது வேதனையளிக்கிறது. பாலியல் குற்றவாளிகளை சமூகத்தில் மற்ற குற்றவாளிகளைப் போல ஏற்கிறோம். இது சமூகம் சாா்ந்த பிரச்னை. பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றவாளிகளில் பலா் அக்கட்சியைச் சோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள். அதனால் அங்கு நடவடிக்கை இருக்காது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லை. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கிறாா்கள். காவல்துறையில் ஆள்கள் பற்றாக்குறை உள்ளது. பிரச்னைகளும் அதிகம் உள்ளது. எனவே, காவல்துறையில் சீா்திருத்தம் கொண்டு வந்து ஆள்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.

மிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டு 30 நாள்களில் உருவானவது இல்லை. மின் கட்டமைப்பு திட்டத்தை திமுக அரசும் உருவாக்கியிருந்தது. அவை முழுமையாக இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை. சோலாா் திட்டத்தை வீடுகளிலும் பயன்படுத்த வேண்டும். மின்வாரிய ஊழியா்கள் கடுமையாக உழைத்தும் அந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. அதனை சீரமைக்க இந்த அரசு முயலும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.