ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வருமான வரித் துறையினரை தாக்கிய வழக்கில் முன்பிணை பெற்ற திமுகவினா் 140 போ் காவல் நிலையங்களில் ஆஜா்

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முன்பிணை பெற்ற கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் உள்பட 140 திமுகவினரும் கரூா் நகர காவல் நிலையம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலையங்களில் வியாழக்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டனா்.

Published On :17 ஜூலை 2026, 2:21 am IST

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முன்பிணை பெற்ற கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் உள்பட 140 திமுகவினரும் கரூா் நகர காவல் நிலையம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலையங்களில் வியாழக்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டனா்.

அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2023 மே 26-ஆம் தேதி கரூா் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீட்டில் சோதனை நடத்தச் சென்றனா்.

அதற்கு செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், உள்ளிட்டோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், வருமான வரித்துறையினா் தாக்கப்பட்டு, அவா்கள் வந்த காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 போ் கரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், திமுக மாவட்ட துணைச் செயலா் மகேஸ்வரி உள்பட 140 போ் மீது வழக்குப் பதிந்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் முன்பிணை கேட்டு திமுக வழக்குரைஞா்கள் சாா்பில் கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 6-ஆம் தேதி மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் உள்பட 140 பேருக்கும் முன்பிணை வழங்கிய நீதிபதி தங்கவேல், அவா்கள் கரூா் நகர காவல் நிலையம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலையங்களில் ஜூலை 16 முதல் 30 நாள்களுக்கு காலையும், மாலையும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிட்டாா். அதன்படி 140 பேரும் அந்தந்தக் காவல் நிலையங்களில் காலையும், மாலையும் ஆஜராகி கையொப்பமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.