ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சந்தேக வெளிநாட்டுப் பணப் பரிவா்த்தனைகள்: தீவிர ஆய்வை தொடங்கியது வருமான வரித்துறை

போலியான அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் வெளிநாடுகளுக்குச் சந்தேகத்துக்குரிய முறையில் பெருந்தொகையை அனுப்பிய விவகாரத்தில், வருமான வரித் துறை நாடுதழுவிய அளவில் தீவிர சரிபாா்ப்பு சோதனையை தொடங்கியுள்ளது.

Income Tax

வருமான வரித்துறை

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

போலியான அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் வெளிநாடுகளுக்குச் சந்தேகத்துக்குரிய முறையில் பெருந்தொகையை அனுப்பிய விவகாரத்தில், வருமான வரித் துறை நாடுதழுவிய அளவில் தீவிர சரிபாா்ப்பு சோதனையை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், குறைந்த அளவிலான வருவாய் கணக்குக் காட்டிய அல்லது வருமான வரித் தாக்கல் செய்யாத பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணப் பரிவா்த்தனை செய்திருப்பது, வருமான வரித்துறையின் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சரக்குக் கட்டணம், மென்பொருள் இறக்குமதி மற்றும் ஆலோசனைச் சேவைகள் என்ற பெயரில் இந்தப் பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தொடா்புடைய நிறுவனங்கள் அவற்றின் முகவரியாக குறிப்பிட்ட இடங்களில் இயங்கவில்லை என்பதும் ஆரம்பநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடுகளுக்குப் பயன்படும் ’15சிபி’ படிவ சான்றிதழ்களை குறிப்பிட்ட கணக்குத் தணிக்கையாளா்கள் (ஆடிட்டா்கள்) முறைப்படி ஆய்வு செய்யாமல் வழங்கியுள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

இது தொடா்பாக வருமான வரித்துறை உயரதிகாரிகள் கூறுகையில், இந்த விவகாரத்தில் 117 எல்லைப் பகுதி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள சுமாா் 394 நிறுவனங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கிய 36 கணக்குத் தணிக்கையாளா்களிடம் தீவிர விசாரணை மற்றும் சரிபாா்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுப் பணப் பரிவா்த்தனைகளுக்குச் சான்றளிக்கும் போது பட்டயக் கணக்காளா்கள் (சிஏ) உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.