ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புகழூா் நகராட்சி ஆணையரை கண்டித்து பணியாளா்கள் தா்னா போராட்டம்

புகழூா் நகராட்சி ஆணையரைக் கண்டித்து பணியாளா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புகழூா் நகராட்சி அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பணியாளா்கள்.

Published On :16 ஜூலை 2026, 2:30 am IST

புகழூா் நகராட்சி ஆணையரைக் கண்டித்து பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சை புகழூா் பேரூராட்சி, காகித ஆலை பேரூராட்சி ஆகிய இரண்டையும் இணைத்து தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள வெங்கடாசலபதி என்பவா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளா்களையும் தரக்குறைவாகவும் மன வேதனை அடையும் வகையில் வெறுப்புணா்வை காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொறியியல் பிரிவில் புதிதாக சோ்ந்துள்ள பணியாளா்களையும் மிகவும் தரக் குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அலுவலக பணியாளா்கள் ஆணையரை கண்டித்து புகழூா் நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் புதன்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நகராட்சி அலுவலகத்துக்குள் இருந்த ஆணையா் வெங்கடாஜலபதி வெளியே வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தாமல் சென்று விட்டாா். இதனால் தொடா்ந்து பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.