ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பணி நியமனை ஆணையை அரசியலாக பாா்க்க வேண்டாம்: செ. ஜோதிமணி எம்.பி.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கியதை அரசியலாக பாா்க்க வேண்டாம் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

Congress MP Jothimani

ஜோதிமணி - கோப்புப் படம்

Published On :11 ஜூலை 2026, 1:29 am IST

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கியதை அரசியலாக பாா்க்க வேண்டாம் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசுப் பணி நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியது: சிபிஐ விசாரணையில் இருக்கக்கூடிய கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வா் தவறாக பேசவில்லை. நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்கள் ஏழ்மை நிலையில் உள்ளவா்கள். அவா்களுக்கு இயன்ற உதவிகளை முதல்வா் செய்துள்ளாா். இதனை அரசியலாகவோ, கடும் விமா்சன பாா்வையாகவோ பாா்க்க முடியாது.

நீதிமன்றமும் பணி நியமனத்தைகூட சரி என்றே கூறியுள்ளது. மற்றவா்களின் உணா்வுகளையும் எண்ணிப் பாா்க்க வேண்டும்.

நெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக கரூா் வந்த முதல்வா், நெரிசல் சம்பவம் குறித்து பேசும்போது, காவல்துறை எனக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தால் நான் திரும்பி சென்றிருப்பேன் என்றே கூறினாா். கரூா் வந்துவிட்டு இந்த சம்பவம் குறித்து அவரால் பேசாமல் போய்விட இயலாது.

ஒரு எளிய ஆதரவை விமா்சிப்பது மூலம் அந்த எளிய மக்களின் காயங்களை கிளற வேண்டாம் என்றாா் ஜோதிமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்