திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூா் கஸ்பா பகுதியில் ரூ. 2 கோடியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் என்றாா் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ.
கரூா் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூா், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, புகழூா் கஸ்பா, புகழூா் மலைவீதி, டிஎன்பிஎல் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ வியாழக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் பிரமாண்டமாக புகழிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு ஏராளமான இடங்களில் உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு, விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவா் உள்பட அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புகழூா் கஸ்பா பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.2 கோடியில் மிகப்பெரிய சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்றாா் அவா். பிரசாரத்தில் புகழூா் நகா்மன்றத் தலைவா் சேகா் (எ) குணசேகரன் மற்றும் மதச்சாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சேந்தமங்கலம், கீழ்பாகம் பகுதிகளில் திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


