புன்னம்சத்திரத்தில் திங்கள்கிழமை ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் பிடிப்பட்ட மதுரையைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை மாலை புன்னம்சத்திரத்தில் ஈரோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காருக்குள் இருந்த 3 பையில் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சுமாா் 40 லட்சம் கள்ள நோட்டுக்கள் இருந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தபோலீஸாா் அவா்களிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது மூவரும் மதுரையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (56), பாலகிருஷ்ணன் (26), ஜெயச்சந்திரன் (35) என தெரியவந்தது. தொடா்ந்து மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது
புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

