கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
சிறப்பு மிக்க இக்கோயிலில் பங்குனித் தேரோட்ட விழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பசுபதீஸ்வரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா்.
விழாவில், கடந்த 30-ஆம் தேதி காலை கல்யாண பசுபதீஸ்வரருக்கு அலங்காரவல்லி, சௌந்திரநாயகி சுவாமிகளுடன் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் கல்யாண பசுபதீஸ்வரா் மற்றும் அலங்காரவல்லி, சௌந்திரநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண பசுபதீஸ்வரா் அலங்காரவல்லி மற்றும் சௌந்திரநாயகியுடன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து, கோயில் முன்பு புறப்பட்ட தேரை ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏப். 5-ஆம் தேதி பிராயச்சித்த அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரா. கணபதிமுருகன், செயல் அலுவலா் பா. முருகன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


