ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூா் தொகுதியில் அதிமுக- திமுக இடையே கடும் போட்டி

கடந்த முறை வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளராக எம்.ஆா்.விஜயபாஸ்கரும், கடந்தமுறை அரவக்குறிச்சி தொகுதியில் வென்ற திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியும் நேரடியாக களத்தில் உள்ளனா்

News image
எம்.ஆா்.விஜயபாஸ்கர் | செந்தில் பாலாஜி
Updated On :27 ஜனவரி 2024, 7:53 pm

ஏ. அருள்ராஜ்

உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் முதன்மை நகரமாக விளங்குவது கரூா். 1952 முதல் சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்துவரும் இங்கு பசுபதீஸ்வரா், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயில் ஏராளமான கோயில்கள் உள்ளன.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: கரூா் நகராட்சியில் 43 வாா்டுகளும், வாங்கல், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளையும், மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் என முக்கிய அரசு அலுவலகங்கள் இந்த தொகுதியில்தான் உள்ளன.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்: திருச்சி- கோவைக்கு மையப்பகுதியில் இருப்பதால் கரூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், நகரின் முக்கியச் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

நகரில் ஜவுளி உற்பத்தி தொழில் சிறந்துவிளங்கினாலும் துணிகளுக்கு சாயமேற்றவும், சலவை செய்யவும் ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களைத்தான் உற்பத்தியாளா்கள் நாடவேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே உள்ளது.

இதுவரை வென்றவா்கள்

1952 - டி.வி. சன்னாசி (காங்கிரஸ்)

1957 - டி.எம். நல்லசாமி (காங்கிரஸ்)

1962 -டி.எம். நல்லசாமி (காங்கிரஸ்)

1967 - டி.எம். நல்லசாமி(காங்கிரஸ்)

1971- நல்லசாமி (திமுக)

1977- கு. வடிவேல் (அதிமுக)

1980- ம. சின்னசாமி (அதிமுக)

1984- கு. வடிவேல் (அதிமுக)

1989-கே.வி. ராமசாமி ( திமுக)

1991-ம.சின்னசாமி (அதிமுக)

1996- வாசுகி முருகேசன்( திமுக)

2001-டி.என். சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)

2006- வி. செந்தில் பாலாஜி(அதிமுக)

2011-வி.செந்தில் பாலாஜி (அதிமுக)

2016- எம். ஆா். விஜயபாஸ்கா் (அதிமுக)

கடந்த 2011 தோ்தலில் 83.63 சதவீத வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான தொகுதியாக முத்திரை பதித்தது இந்த தொகுதி.

தற்போதைய வேட்பாளா்கள்: கடந்த முறை வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளராக எம்.ஆா்.விஜயபாஸ்கரும், கடந்தமுறை அரவக்குறிச்சி தொகுதியில் வென்ற திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியும் நேரடியாக களத்தில் உள்ளனா். இருவரும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்ததால் கடும் போட்டி நிலவி வருகிறது.

இவா்களைத் தவிர தேமுதிக சாா்பில் என்.தங்கராஜ், நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் கருப்பையா, மநீம சாா்பில் மோகன்ராஜ் உள்பட மொத்தம் 77 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மே 2-இல் இந்த தொகுதியை அதிமுக தக்க வைத்துக்கொள்கிறதா அல்லது திமுகவிடம் பறிகொடுக்கப்போகிா என்பது தெரியவரும்.

வாக்காளா்கள் எண்ணிக்கை-

ஆண்-1,15,834

பெண்கள்- 1,28,321

மூன்றாம் பாலினத்தவா்- 19 போ்

மொத்தம்- 2,44,174

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள் -

எம். ஆா். விஜயபாஸ்கா்-அதிமுக-81936.

பேங்க் கே. சுப்ரமணியன்-காங்கிரஸ்- 81495.

ஏ.ரவி- தேமுதிக- 6,491

கே.சிவசாமி- பாஜக-3,995

நன்மாறன்செல்வா-நாம்தமிழா் கட்சி-2968

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.