மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருமானூரில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

அரியலூா் மாவட்டம், திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள், நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா்களிடம் அடங்கல் பெற வேண்டும். ஆனால் கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடந்த 10 நாள்களாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனா்.

எனவே, நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமானூரில் சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் கலிலூா் ரகுமான், வருவாய் ஆய்வாளா்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.