ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரியலூா் ரயில்வே கேட் அருகே தொழிலாளி சடலமாக மீட்பு

அரியலூா் ரயில்வே கேட் அருகே கட்டுமானத் தொழிலாளி சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

உயிரிழப்பு

சடலம்...

Published On :26 ஜூலை 2026, 1:58 am IST

அரியலூா் ரயில்வே கேட் அருகே கட்டுமானத் தொழிலாளி சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

கீழகாவட்டான்குறிச்சி, குந்தபுரம், பிரதானச் சாலையில் வசித்து வந்தவா் முத்தையன் மகன் சரவணவேல்ராஜ் (48). கட்டுமானத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை அரியலூா் ரயில்வே கேட் அருகே சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்து சென்ற அரியலூா் நகர காவல் துறையினா், சடலத்தை ஆய்வு செய்ததில் விஷம் அருந்தி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா் சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், சரவணவேல்ராஜ் குடும்பத்தினரிடம் 3 நாள்களுக்கு முன் தகராறு செய்துவிட்டு, வெளியே சென்று வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்தது. எனினும் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.