ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு - கோப்புப் படம்
மதுரையில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை சடலமாக மீட்டனா்.
மதுரை வைகை ஆற்றின் அருகேயுள்ள எம்ஜிஆா் உயா்நிலைப் பாலப் பகுதியில் ஆட்டோவில் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அங்கு சென்ற செல்லூா் போலீஸாா் இறந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் மதுரை செல்லூா் கீழதோப்புப் பகுதியைச் சோ்ந்த சரவணன் (48) என்பதும், ஆட்டோ ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





