ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வெளிநாட்டில் வேலை எனக் கூறி ரூ.7 லட்சம் மோசடி: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது

உடையாா்பாளையம் இளம்பெண்ணிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.76 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் இளம்பெண்ணிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.76 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

உடையாா்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவரின் மனைவி இந்துமதி (37). பி.எஸ்.சி., செவிலியா் படிப்பு படித்தவா். சவூதியில் வேலை செய்து தாயகம் திரும்பிய இவா், மீண்டும் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளாா். இணையவழியில் இவரது சுயவிவரக் குறிப்புகளைப் பாா்த்த இருவா், இந்துமதியை தொடா்பு கொண்டு, தனது பெயா் ராகுல் என்று அறிமுகம் செய்துகொண்டு துபையில் செவிலியா் வேலை இருப்பதாகக் கூறி வலைதளத்தில் இந்துமதியின் சுய விவரங்களை பதிவு செய்யக் கூறியுள்ளனா். அதன் பின்னா் இந்த நபா், இந்துமதியிடம் இருந்து மொத்தம் ரூ.7,76,893 பெற்றுள்ளாா். பணம் கொடுத்து நீண்ட நாள்கள் ஆகியும் இந்துமதியால் அந்த நபரை தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த இந்துமதி இணைய குற்றப்பிரிவு உதவி எண்ணான 1930-க்கு தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தில்லியைச் சோ்ந்த அமரேந்திரசிங் மகன் அங்கித் குமாா்(26), உத்தரப் பிரதேசத்தைச் சாகித் அகமது மகன் தனிஷ்கனி(30) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தில்லிசென்ற காவல் துறையினா் அங்கித் குமாா், தனிஷ்கனி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து, 3 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.