அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு கிராமத்திலுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8 நாள்களாக லட்சுமி நரசிம்ம பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் 9 -ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
ராஜவீதிகளில் வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது.
நரசிம்மரின் அவதார தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


