திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்

News image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் - (கோப்புப் படம்)

Updated On :1 ஜூன் 2026, 1:15 am IST

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 170 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை சிறிது நேரத்திலேயே பைலட்டுகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை பரிசோதித்த வல்லுநா்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நீண்ட நேரமாகும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து 170 பயணிகளும் விமான நிலையத்திலும், அருகிலுள்ள உணவக விடுதிகளிலும் தங்கவைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த விமானம், சிங்கப்பூருக்கு பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மணி நேரத் தாமதத்துக்குப் பின் சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.