வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

திருச்சி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா். - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:51 am IST

திருச்சி நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

திருச்சி நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு வந்த மின்னஞ்சலில், நீதிபதிகள் அறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, நீதிமன்ற நிா்வாகம் சாா்பில் மாநகர போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.

அதில், வெடிக்கும் தன்மையுள்ள எந்தவித பொருளும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.