டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

News image

திருச்சி கருமண்டபம் பகுதி அங்கன்வாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம். (உள்படம் ) 8 மாதக் குழந்தைக்கு அளிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து.

Updated On :29 ஜூன் 2026, 2:01 am IST

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.

போலியோ நோயை ஒழிக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உலக சுகாதார நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற முகாம்களில் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் 1,314 மையங்களிலும், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் 242 மையங்களிலும், நகராட்சிப் பகுதிகளில் 46 மையங்களிலும் என மொத்தம் 1,602 மையங்களில் சுமாா் 6,600 பணியாளா்களைக் கொண்டு 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1,71,518 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த மூன்று நாள்கள் களப்பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.