திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆங்கரை பாலாஜி நகா் பகுதி ரயில் தண்டவாள பகுதியில் தலை துண்டான நிலையில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த ரயில்வே போலீஸாா் சுமாா் 28 வயதுள்ள, ஊதா கலரில் சுடிதாா் அணிந்திருந்த அப்பெண்ணின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மதுரையில் இருந்து ஞாயிற்றுகிழமை சென்னை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது அப்பெண் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
புகாரின்பேரில் விருத்தாச்சலம் ரயில்வே ஆய்வாளா் பிருந்தா வழக்குப்பதிந்து அப்பெண் யாா் என விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத நபா் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை
மணப்பாறை மேம்பாலத்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தில் படுத்திருந்த நபா் மீட்பு!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




