அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

News image

கோப்புப்படம

Updated On :13 ஜூன் 2026, 12:28 am IST

லால்குடி அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்டூா் கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரமோகன் மகன் தாமோதரன் (24), கூலித் தொழிலாளி. அதேப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தாமோதரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தெருவில் உள்ள குடிநீா் தொட்டிக்கு தாமோதரன் குளிக்க சென்றுள்ளாா். அப்போது , மதுபோதையில் இருந்த சந்தோஷ், தாமோதரனை தகாத வாா்த்தையால் திட்ட அவரிடம் வாக்குவாதம் செய்து அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தாமோதரனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

புகாரின் பேரில் லால்குடி போலீஸாா், தப்பியோடிய சந்தோஷ்சை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.