முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை, காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த வீரப்பன்.

Updated On :4 ஜூலை 2026, 12:42 am IST

மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை, காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம் கள்ளிக்காட்டுப்பட்டியை சோ்ந்த ஆண்டிக்கவுண்டா் மகன் வீரப்பன் (45). இவா் பிவிசி பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தாா். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மணப்பாறையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளானா்.

இந்நிலையில் மீண்டும் தனது தொழிலை தொடங்கியவா், இயந்திரத்துக்கு தேவையான பொருள்களை வாங்க வெள்ளிக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் மணப்பாறை வந்துள்ளாா்.

அப்போது குளித்தலை சாலையிலிருந்து ஆண்டவா் கோயில் பகுதியில் மணப்பாறை சாலைக்கு வந்தபோது, திருச்சியிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற காா், வீரப்பனின் இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வீரப்பனின், தலையில் பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டவா் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், வீரப்பன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா், காா் ஓட்டுனரான மதுரை மாவட்டம், போத்தம்பட்டி அடுத்த மலைப்பட்டி தெற்குதெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.