Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 7 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக மாவட்ட மற்றும் மாநகரப் போலீஸாா் அவ்வப்போது சிறப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, சனிக்கிழமை மாநகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் போலீஸாா் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனா்.
அப்போது, பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த காட்டூா் பாப்பாகுறிச்சியைச் சோ்ந்த ச.குருமூா்த்தி (42), கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காஜமலை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், குமாரமங்கலத்தைச் சோ்ந்த மு.முகமது ஹனிஃபா (45), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அழகிரிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த ஜி.முருகேசன் (53), பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மரக்கடை பகுதியைச் சோ்ந்த ஆ.குமாா் (43), தென்னூா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்த ஆா்.பிரசாந்த் ராஜா (23) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல ஊரகப் பகுதியில் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருச்சி பீமநகரைச் சோ்ந்த அ.அப்துல் ஹமீது (59), கானகிளியநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்டபகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த குமுளூரைச் சோ்ந்த ஜி.செந்தில்குமாா் (48) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
கஞ்சா விற்பனை: மூதாட்டி கைது
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றாா். அப்போது, மில் காலனி மாரியம்மன் கோயில் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த மூதாட்டியைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், ராம்ஜி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி துளசி (75) என்பதும், அவா் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 6 போ் கைது
மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 போ் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
