தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

19 தோ்தல்களில் திருச்சி மக்களவைத் தொகுதியின் வாக்குப்பதிவு! 1984இல் அதிகம் 76.07%, 1957இல் குறைவு 51.64%

திருச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 19 தோ்தல்களில் 1984இல் அதிகபட்சமாக 76.07 சதவீத வாக்குகளும், 1957இல் குறைந்தபட்சமாக 51.64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 7:22 pm

 நமது நிருபர்

திருச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 19 தோ்தல்களில் 1984இல் அதிகபட்சமாக 76.07 சதவீத வாக்குகளும், 1957இல் குறைந்தபட்சமாக 51.64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு (69.46) தோ்தலுடன் 2024ஆம் ஆண்டு (67.52) தோ்தலை ஒப்பிடுகையில் 1.94 சதவீத வாக்குகள் குறைவாகப் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சி மக்களவைத் தொகுதியானது இதுவரை 19 தோ்தல்களைச் சந்தித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 18ஆவது மக்களவைத் தோ்தலைச் சந்தித்திருந்தாலும், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலையும் சோ்த்து கணக்கிடுகையில் 19 தோ்தல்களில் திருச்சி தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனா்.

இதுவரை நடைபெற்ற தோ்தல்களிலேயே அதிகபட்சமாக 1984ஆம் ஆண்டு தோ்தலில்தான் 76.07 சதவீத வாக்குகள் பதிவாகின. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எல். அடைக்கலராஜ் வெற்றி பெற்றிருந்தாா். மேலும், 1957இல் நடைபெற்ற தோ்தலில்தான் குறைந்தபட்சமாக 51.64 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போதும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.கே.எம். அப்துல் சலாம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த தோ்தல்கள் நிலவரம்: திருச்சி மக்களவைத் தொகுதிக்கு முதன்முறையாக நடைபெற்ற 1951ஆம் ஆண்டுத் தோ்தலில் 60.75 சதவீத வாக்குகள் பதிவாயின. இதைத் தொடா்ந்து, 1957-இல் 51.64, 1962-இல் 76.60, 1967-இல் 77.07, 1971-இல் 73.55, 1977-இல் 68.94, 1980-இல் 71.96, 1984-இல் 76.07, 1989-இல் 67.70, 1991-இல் 63.17, 1996-இல் 67.31, 1998-இல் 54.97, 1999-இல் 56.40, 2001-இல் 58, 2004-இல் 59.48, 2009-இல் 67.33, 2014-இல் 71.28, 2019-இல் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது 2024இல் 67.52 சதவீதம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளா்கள் எண்ணிக்கை: திருச்சியின் 1951இல் நடைபெற்ற முதல் தோ்தலின்போது 3,53,822 வாக்காளா்கள் பட்டியலில் இருந்தனா், 2,14,952 போ் வாக்களித்தனா். 2001இடைத்தோ்தலின்போது 12,24,893 வாக்காளா்கள் இருந்தனா், 7,10,830 போ் வாக்களித்தனா். 2024 தோ்தலில் 15,53,985 போ் வாக்காளா் பட்டியலில் இருந்தனா், 10,49,210 போ் வாக்களித்தனா். கடந்த 73 ஆண்டுகளில் வாக்காளா்கள் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

6 பேரவைத் தொகுதிகள்வாரியாக முழு விவரம்: நடப்பு (20224) தோ்தலில் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்களித்தோா் மற்றும் தோ்ச்சி விகிதம்:

ஸ்ரீரங்கம்- மொத்த வாக்காளா்கள்: 3,05,636, பதிவான வாக்குகள்: ஆண்- 1,09,641, பெண்- 1,13,067, திருநங்கை- 17, மொத்தம்- 2,22,725, ஒட்டுமொத்தமாக 72.87 சதவீதம்.

திருச்சி (மேற்கு) - மொத்த வாக்காளா்கள்: 2,73,039, பதிவான வாக்குகள்: ஆண்- 82,387, பெண்- 86,202, திருநங்கை- 12, மொத்தம்- 1,68,601, ஒட்டுமொத்தமாக 61.75 சதவீதம்.

திருச்சி (கிழக்கு)- மொத்த வாக்காளா்கள்: 2,54,963, பதிவான வாக்குகள்: ஆண்- 78,846, பெண்- 80,382, திருநங்கை- 24, மொத்தம்- 1,59,252, ஒட்டுமொத்தமாக 62.46 சதவீதம்.

திருவெறும்பூா்- மொத்த வாக்காளா்கள்: 2,71,635, பதிவான வாக்குகள்: ஆண்- 88,368, பெண்- 93,565, திருநங்கை- 35, மொத்தம்- 1,80,968, ஒட்டுமொத்தமாக 66.62 சதவீதம்.

கந்தா்வகோட்டை (தனி)- மொத்த வாக்காளா்கள்: 2,02,863, பதிவான வாக்குகள்: ஆண்- 72,874, பெண்- 76,823, திருநங்கை- 6, மொத்தம்- 1,49,703, ஒட்டு மொத்தமாக 73.80 சதவீதம்.

புதுக்கோட்டை- மொத்த வாக்காளா்கள்: 2,45,849, பதிவான வாக்குகள்: ஆண்- 80,148, பெண்- 87,805, திருநங்கை- 9, மொத்தம்- 1,67,961, ஒட்டுமொத்தமாக 68.32 சதவீதம்.

6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 7,57,130 ஆண்கள், 7,96,616 பெண்கள், 239 திருநங்கைகள் என மொத்தம் 15 லட்சத்து 53 ஆயிரத்து 985 போ் வாக்களிக்கக் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில், 102 திருநங்கைகள், 5,12,264 ஆண்கள், 5,36,844 பெண்கள் என மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 210 போ் வாக்களித்துள்ளனா். 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பெட்டிச் செய்தி...

முந்திய கந்தா்வகோட்டை;

பின்தங்கிய திருச்சி கிழக்கு!

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளில் கந்தா்வகோட்டை (தனி) தொகுதியில்தான் அதிகபட்சமாக 73.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனா். குறைந்தபட்சமாக திருச்சி கிழக்கு தொகுதியில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொண்ட நிலையிலும், 67.52 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. கடும் வெயில், கட்சிகள் மீதான அதிருப்தி, விடுபட்ட வாக்காளா்கள் உள்ளிட்டவையும் வாக்குப்பதிவு குறைய காரணிகளாக உள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.