கரூர், ஜூலை 24: கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் தற்போது போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது.
பேருந்து கூண்டு கட்டுதல், ஜவுளி, கொசுவலை போன்ற தொழில்களின் நகரமாக விளங்கி வருகிறது கரூர்.
கரூரிலுள்ள முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு அப்போதைய மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டதாகும். தொழில் நகரமாகிவிட்ட கரூர் நகரில் இன்று 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பேருந்து நிலையத்துக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், 50,000-த்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
ஆனால், இப்பேருந்து நிலையம் போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும், பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் பொதுமக்கள் நிற்க முடியாத அளவுக்கு அனைத்துப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
காலை 8 மணிக்கு ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி 10 மணி அளவிலும், மாலை 6 மணிக்கு மேல் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி இரவு 9 மணி வரை பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் இருந்து வருகிறது. உள்ளே ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மனோகரா வளைவு, பழைய புறவழிச்சாலை, கோவை சாலை வரை சில நேரங்களில் பேருந்துகளும், இதர வாகனங்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சற்று குறைக்கும் வகையில், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் கோவை சாலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பாதை வழியாக திரும்பி, பேருந்து நிலையத்துக்குள் வருவதற்காக நகர்மன்றம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றாலும், இது எத்தனை நாளைக்கு பயன்தரும் என்று தெரியாது என்கின்றனர் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்.
உடனடி மாற்றம் தேவை : முந்தைய அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையத்தை சுக்காலியூர் பகுதிக்கு மாற்றுவதென முடிவு செய்து, அதற்கான கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
கரூர் நகர்மன்றத்துடன் இணைக்கப்படாமல் முன்பிருந்த இனாம் கரூர், தாந்தோனி நகர்மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும், கரூர் நகர்மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி, சுக்காலியூரில் பேருந்து நிலையத்தை அமைக்கலாம் என கருத்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணி கிடப்பிலேயே உள்ளது என்கிறார் கரூர் நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு.
சுக்காலியூர் இல்லையென்றாலும், கரூரில் வேறு எந்தப் பகுதியில் இடம் கிடைத்தாலும் உடனடியாக அந்த இடத்தை தேர்வு செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து கரூர் நகர்மன்ற அலுவலர்களிடம் கேட்ட போது, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எந்தப் பகுதியில் அமைப்பது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

