டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மண் புழு உரம் தயாரிப்புக்கு அரசின் ஊக்குவிப்பு தேவை

பெரம்பலூர், ஜன. 29: விவசாயிகளிடையே, மண் புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விளை நிலங்களெல்லாம், "

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:01 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், ஜன. 29: விவசாயிகளிடையே, மண் புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விளை நிலங்களெல்லாம், "விலை' நிலங்களாக மாறி வரும் சூழலில், இயற்கையை சார்ந்து சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேபோல, பாரம்பரியமாக செய்து வரும் விவசாயத்தை  கைவிட்டு, கிராமப்புற இளைஞர்களும் மாற்றுத் தொழில் செய்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாகுபடி செலவைவிட குறைந்த வருவாய் கிடைப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.  

மக்கிய எருவை மட்டுமே மண் புழு உண்ணும். சாதாரண எருவைவிட, மண் புழு உரத்தில் 6 மடங்கு தழைச்சத்து, 7 மடங்கு மணிச்சத்து, 11 மடங்கு சாம்பல் சத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கிலோ மாட்டுச் சாணத்தில், 30 கிலோ தாவரக் கழிவுகளை மக்க வைக்க முடியும். ஒரு மாடு பத்து கிலோ சாணம் கொடுத்தால் 300 கிலோ தாவரக் கழிவை மக்க வைக்கலாம். பண்ணைக் கழிவுகளை மட்டும் பயன்படுத்தினால், தரமான உரம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு நாளும் தேவையான அளவுக்கு கழிவுகள் கிடைப்பதில்லை.

இதனால், கழிவு பற்றாக்குறையை தீர்க்க குடியிருப்புகளில் கிடைக்கும் கழிவை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனராம். இந்தக் கழிவுகள் மூலம் எருவின் தரம் குறைந்து விடுவதால், தயாரித்த மண்புழு உரத்தை விற்பனை செய்வதில் இடையூறு ஏற்படுவதாகத் தெரிகிறது.

உள்ளூர் சந்தையில் மண்புழு உர விற்பனையை உயர்த்த, விவசாயிகளிடம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, ஏற்றுமதி வாய்ப்பை அதிகரித்துத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். செயற்கை உரங்களுக்கு அளித்து வரும் மானியத்தைக் குறைத்து, இயற்கை உரங்களுக்கு கூடுதல் மானியம் அளிக்க வேண்டும் என்பது இயற்கை உரம் தயாரிப்பவர்களின் கோரிக்கையாகும்.

அண்மைக்காலமாக, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல விவசாயிகள் மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உரம் ஏற்றுமதி தரத்தில் இல்லாததால், தமிழகத்திலேயே சந்தைப்படுத்தும் நிலை உள்ளது.

மண் புழு உரத்தை ஏற்றுமதி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெற, தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அனுமதி பெற வேண்டும். ஆனால், குறைந்த அளவிலான விவசாயிகளே அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மண்புழு உரம் தயாரிக்க, கூடுதலான உதவி மற்றும் ஊக்குவிப்பு தேவை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறியது:

மண்ணில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. செயற்கை உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நுண்ணுயிரிகள் இறந்துவிடுகின்றன.

இயற்கை இடுபொருள், இருப்பு வைத்தல், பேக்கிங் செய்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை ஏற்றுமதியில் கவனிக்க வேண்டியவை. இதற்கு, தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும். மண்புழு உரம் தயாரிப்பதற்கான விவரம் மற்றும் உதவிகளுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தையும், சான்று பெறுவதற்கு அங்கக சான்றளிப்பு துறையையும் அணுகலாம். அங்ககச் சான்று பெற ரூ. 3,400 கட்டணமாகும். மண் புழு உரத்துக்கான தரத்தை நிர்ணயம் செய்வதில் வெளிநாடுகளில்கூட போதுமான விழிப்புணர்வு இல்லை.

தமிழக விவசாயிகள் முயற்சி செய்து மண் புழு உர ஏற்றுமதிக்கான வாய்ப்பைப் பெற்றால், அவர்களின் எதிர்காலம் சிறப்படையும் என்றனர். எனவே, விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும், நலிவடைந்த விவசாயிகளைப் பாதுகாக்கவும் மண் புழு தயாரிப்புக்கு ஊக்கமளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.