கரூர், ஏப். 5: கரூரில் செயல்பட்டு வந்த பல சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால், இவற்றில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு கட்டுமானப் பணிகள் தற்போது வாழ்வாதாரமாக உள்ளது.
கடந்த 3 மாதங்களாக சாயப்பட்டறைகள் மூடப்பட்ட நிலையில், இவற்றில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தற்போது கட்டடப் பணியை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கரூர் பகுதியில் பல இடங்களில் தற்போது கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், சாயப்பட்டறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்கிறது. மேலும், கூடுதலான ஊதியமும் கிடைக்கிறது. பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 200 முதல் ரூ. 250 வரை ஊதியம் கிடைப்பதால், அவர்களும் கட்டட வேலைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கட்டடப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறையாக இருந்ததால், பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாத நிலை இருந்து வந்தது. தற்போது, வேலையின்றி இருந்த சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் கட்டட வேலைக்கு வருவதால், கட்டடப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிகிறது என்கிறார் கரூரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர்.
கரூர் சின்ன, பெரிய ஆண்டான்கோவில், கொடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. இவற்றில் முறையான சுத்திகரிப்பு வசதி செய்யாததால், இவற்றின் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலந்தது.
இதனால், ஆற்றுப் பாசனம் மூலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அந்தப் பகுதிகளில் எவ்வித விவசாயப் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை இருந்து. இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை பல இடங்களில் சாயப்பட்டறைகள் அமல்படுத்தாமல் இருந்தன.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி செய்யாத சுமார் 474 சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் சீல் வைக்கப்பட்டது. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

