டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெரம்பலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் : அதிமுக - திமுக கடும் போட்டி

பெரம்பலூர், அக். 24: பெரம்பலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.  2006-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:54 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், அக். 24: பெரம்பலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

 2006-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம்.என். ராஜா நகர்மன்றத் தலைவராகவும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கி. முகுந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 பேரூராட்சியாக இருந்த பெரம்பலூர், நகர மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், கடந்த 2009 ஆம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில், தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ரமேஷ் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும், அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 இதில் 1, 8, 10, 12, 18, 19 ஆகிய வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும், 2, 3, 4, 6, 9, 11 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 6 பேரும், 5, 7, 14, 15, 17, 20 ஆகிய வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும், 13, 16, 21 ஆகிய வார்டுகளில் தேமுதிக வேட்பாளர்கள் 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

 அதிமுகவும், திமுகவும் சம பலத்தில் உள்ளதால், துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், திமுக, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவைக் கோரி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

 அதேபோல, சுயேச்சை வேட்பாளர்களில் சிலரும் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 எனவே, பெரம்பலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகளுக்கிடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.