எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மும்முரமாக இயங்கும் அச்சகங்கள்

அரியலூர், அக். 6: பொதுத் தேர்தலைப் போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் தொடருவதால், பிளக்ஸ் போர்டுகளை வைத்து வாக்குகள் சேகரிப்பதை தவிர்த்து, சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள

Updated On :19 செப்டம்பர் 2012, 11:46 pm

அரியலூர், அக். 6: பொதுத் தேர்தலைப் போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் தொடருவதால், பிளக்ஸ் போர்டுகளை வைத்து வாக்குகள் சேகரிப்பதை தவிர்த்து, சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களின் பக்கம் தங்களது பார்வையைச் செலுத்தத் தொடங்கிவிட்டனர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்.

 இதனால், டிஜிட்டல் பிளக்ஸ் வியாபாரம் மந்த நிலையில் இருக்க, சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துக் கொடுக்கும் பணி அச்சகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நகர்ப்புறங்களில் சுவர் விளம்பரமோ, டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளையோ வேட்பாளர்கள் வைக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் சுவர் விளம்பரம் செய்வதிலும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 மேலும், வேட்பாளரின் பெயருடன் யாரேனும் பிளக்ஸ் போர்டுகளை வைத்தாலும், அந்தச் செலவுக் கணக்கும் வேட்பாளரின் செலவுப் பட்டியலில் சேர்ந்துவிடும் என்பதால், பெரும்பாலான வேட்பாளர்கள் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளை வைப்பதைத் தவிர்த்து, தற்போது தங்களது சின்னங்களைக் கொண்ட சுவரொட்டிகளையும், துண்டுப் பிரசுரங்களையும் அச்சடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளால், தற்போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமல்லாது, சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது பார்வையை சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் பக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், அரியலூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அச்சகங்கள் தற்போது மும்முரமாக நேரம் பாராது இயங்கி வருகின்றன.

 விலை எவ்வளவு: தற்போது லித்தோ சுவரொட்டி 100 எண்ணிக்கை கொண்டது ரூ. 900 முதல் ரூ. 1000 வரை அச்சடித்துத் தரப்படுகிறது. இந்த விலையில் சற்று கூடுதலும், குறைவும் இருக்கலாம். அச்சகங்கள் தங்களிடம் தொடர்ந்து சுவரொட்டிகளை அச்சடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையையும் வழங்கி வருகின்றன.

 இதேபோல, துண்டுப் பிரசுரம் வகையில் ஏ-4 அளவு 1000 எண்ணிக்கைக்கு ரூ. 600 முதல் ரூ. 700 வரையிலும், ஏ-3 அளவு 1000 எண்ணிக்கைக்கு ரூ. 1200 முதல் ரூ.1300 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தொகை பெறப்படுகிறது.

 அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் ஒரே நேரத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்களை அச்சிட்டு சுவரொட்டிகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அதாவது, நகர்மன்றத்தில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரின் பெயரையும் சேர்த்து அச்சடிக்கும் முறையை இந்தத் தேர்தலில் அதிகளவில் பின்பற்றுகின்றனர். தேர்தலுக்கு இன்னமும் 10 நாள்களே இருப்பதால், தற்போதைய வியாபாரம், நாள்கள் ஆக ஆக மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அரியலூரைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஒருவர்.

 சுயேச்சைகளே அதிகம்: அரசியல் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சித் தலைவர் பதவிக்கும் போட்டியிடுபவர்கள்தான் அதிகளவில் சுவரொட்டிகளையும், துண்டுப் பிரசுரங்களையும் அச்சடிக்க ஆர்டர் தருகின்றனர். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னத்தை தாங்கள் போட்டியிடும் பகுதியில் பிரபலமாக்குவதற்கு அதிகம் விரும்புவது துண்டுப் பிரசுரங்களைத்தான். அதிலும், பல வண்ண துண்டுப் பிரசுரங்களை அச்சடித்துத் தருமாறு சுயேச்சை வேட்பாளர்கள் கேட்கின்றனர் என்கிறார் அந்த அச்சக உரிமையாளர்.

 துண்டுப் பிரசுரம், சுவரொட்டி போன்று, கிராமங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள், மூங்கில் தட்டிகளைக் கொண்டு தங்களது சின்னங்களை மின் விளக்குகளால் தயார் செய்து வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு குறைந்த நாள்களே இருப்பதால், வேட்பாளர்களைப் போன்று அச்சகங்களும் தற்போது தீவிரமாக இயங்கி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.