திருவெறும்பூர், நவ. 15: திருச்சி திருவானைக்கா கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோயில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
ஏற்கெனவே, இது பிரதான சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், திருச்சி திருவானைக்கா அருகேயுள்ள உத்தமர்சீலி மணல் குவாரியில் திருச்சி மாவட்ட லாரிகள் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் லாரிகளும் மணல் எடுத்துச் செல்கின்றன.
இந்த லாரிகளுக்கு மட்டும் கொண்டையம்பேட்டை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அனுமதிச் சீட்டும், பொன்னுரங்கபுரம் கொள்ளிடம் கரைக்கு செல்ல ஒரு அனுமதிச் சீட்டும் வாங்கிக் கொண்டு, அதன் பிறகு உத்தமர்சீலி, கிளிக்கூடு பகுதியில் மணல் எடுக்க கட்டண அனுமதிச் சீட்டும் பெற்ற பிறகே மணல் எடுக்கப்படுகின்றன. இந்த வரிசையில் நாள்தோறும் சுமார் 650-க்கும் அதிகமான லாரிகள் மணல் அள்ளிச் செல்கின்றன. இப்படி வரிசையில் நிற்கும் லாரிகள் மணல் அள்ள ஒரு நாளாகிறது. இதனால், நாள்தோறும் கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோயில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை, பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம் பகுதியிலுள்ள சாலைகள் என ஏறத்தாழ 13 கி.மீ. தொலைவுக்கு உள்ள சாலைகள், மணல் லாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு, ஓட்டுநர்கள் அப்படியே தூங்கிவிடுகின்றனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பகல், இரவு என எந்த நேரமாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல வழியில்லாமல் சாலைகளை லாரிகள் முற்றிலும் ஆக்கிரமித்து நிற்கின்றன.
இதனால், பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதி மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையைக் கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொண்டையம்பேட்டை, பொன்னுரங்கபுரம் பகுதி மக்கள் கூறியது: கடந்த ஆட்சியில் மணல் எடுக்க திருச்சி மாவட்டத்தில் உள்ள லாரிகள் மட்டும்தான் வந்தன. இதனால், எங்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. தற்போது, வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் சுமார் 650-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த மணல் லாரிகள் அனைத்தும் கொள்ளிடம் பாலம் அருகே ஆற்றின் கரையிலேயே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது மணல் குவாரிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்' என்றனர் கிராம மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

