திருவெறும்பூர், ஜூலை 20: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து நிகழும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க காவல் ஆய்வாளர் தலைமையில் தனி குற்றப் பிரிவு தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவெறும்பூர் வட்டாரத்தில் திருவெறும்பூர், பெல், துவாக்குடி, நவல்பட்டு ஆகிய பகுதிகளில் காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டாக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் நகை மற்றும் பொருள்கள் கொள்ளை போயுள்ளன.
நவல்பட்டு காவல் நிலையத்துக்கு உள்பட்ட நவல்பட்டு அண்ணாநகர், போலீஸ் காலனி, பர்மா காலனி, பூலாங்குடி காலனி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு வீட்டு வாசலில் அதிகாலையில் கோலம் போட்ட பெண்களிடமிருந்து நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஆனால், இதுவரை அந்த மர்ம நபர்களை போலீஸôர் பிடித்ததாகவோ அல்லது நகைகளை மீட்டு உரியவர்களிடம் கொடுத்ததாகவோ தெரியவில்லை.
இதேபோல, பெல் வளாகக் குடியிருப்புப் பகுதி, துவாக்குடி அண்ணா வளைவு, திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர், கைலாஷ்நகர், பாலாஜிநகர், விக்னேஷ்நகர், அம்மன்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வரும் மர்ம நபர்கள் நகைகளைப் பறித்துச் செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த 7 ஆம் தேதி பெல் வளாகம் இ செக்டார் பகுதியில் வசிக்கும் நாகராஜன் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது தாய் நாகலட்சுமியைக் கொலை செய்தனர். மேலும், அந்த வீட்டில் மர்மப் பொடிகளைத் தூவிவிட்டு, வீட்டிலிருந்த 20 பவுன் நகைகளையும், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தையும் திருடிச் சென்றனர்.
அதே நாளில் திருவெறும்பூர் அருகேயுள்ள கீழமுருக்கூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது, அவரிடமிருந்த தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
கடந்த 18 ஆம் தேதி காட்டூர் விக்னேஷ்நகர் பகுதியைச் சேர்ந்த கேசவன் வீட்டின் பூட்டை உடைத்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.
பொதுமக்களிடைய இந்த அச்சம் தீர்வதற்குள், காட்டூர் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் வீட்டின் பூட்டை உடைத்து, 14 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்தும், தனிப் படை அமைக்கப்பட்டும் இதுவரை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்யவில்லை என்பது தான் உண்மை.
இதுகுறித்து கடந்த ஆண்டு நகைகளைப் பறிகொடுத்த ஒரு பெண் கூறியது:
கடந்த ஆண்டு மர்ம நபர்களால் எனது வீடு சூறையாடப்பட்டு, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், போலீஸôர் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடித்து நகைகளை மீட்டுக் கொடுக்கவில்லை. எனது புகார் மீதான விசாரணை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றார் அவர்.
இதுகுறித்து போலீஸôர் கூறியது:
இதுபோன்று நடைபெறும் திருட்டுச் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, மர்ம நபர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. தனிப் படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைத் தேடி வருகிறோம்.
திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, துவாக்குடி, நவல்பட்டு, பெல் போன்ற காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லை.
கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறோம். பொதுமக்கள் வெளியூர் செல்வதாக இருந்தால், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். ஆனால், பொதுமக்கள் அதைப் பொருள்படுத்துவதில்லை. குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர் போலீஸôர்.
திருவெறும்பூர் வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, காவல் ஆய்வாளர் தலைமையில் தனி குற்றப் பிரிவு தொடங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

