இதைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக அரசு, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டின் காரணமாக, மூன்றாம் நிலையிலிருந்து அரியலூர் நகராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தி, அதற்கான அரசாணையை வெளியிட்டது. ஆனால், தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டாகியும், இரண்டாம் நிலை நகராட்சிக்குரிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருக்கிறது. இரண்டாம் நிலை நகராட்சிக்குரிய மேலாளர் ஒருவர், காசாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், நகராட்சிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், ஓட்டுநர், நகரமைப்பு ஆய்வாளர், 15 சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு பணியிடங்கள் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.