தஞ்சாவூர், செப். 12: விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த பயிர்க் கடன் தொகையை மத்தியக் கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மத்தியக் கூட்டுறவு வங்கி கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு நெல், வாழை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஆண்டுதோறும் கடன்கள் வழங்குகின்றன. எந்தெந்தப் பயிர்களுக்கு எவ்வளவு கடன் தொகை வழங்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கும்.
தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களை இணைத்து அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள், முன்னோடி வங்கி மேலாளர், நபார்டு உதவிப் பொது மேலாளர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்கள், விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழுக் கூட்டம் நடத்தி, கருத்தறிந்து கடன் தொகை அளவைக் குறிப்பிட்டு, அறிக்கை தயாரித்து மாநில கூட்டுறவு அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
அதை அரசு பரிசீலித்து எந்தப் பருவத்தில் எவ்வளவு கடன் தொகை, எந்தெந்தப் பயிர்களுக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்று வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும். அதனடிப்படையில், வங்கிகள் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் முதல் அடுத்த மார்ச் மாதம் வரை (காரீப் பருவம்) கடன் வழங்கும்.
தஞ்சாவூரில் கடந்த ஆண்டு டிச. 31-ம் தேதி நடைபெற்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் 2010, மார்ச் முதல் 2011, மார்ச் வரை பயிர்க் கடன் (நெல் பயிர்) ஏக்கருக்கு | 11,000 வழங்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, அதனடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அரசு பரிந்துரை செய்தது.
அரசின் பரிந்துரைப்படி, கூட்டுறவு வங்கிகள் விவரம் அறிந்த சில விவசாயிகளுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட | 11,000 பயிர்க் கடன் வழங்குவதாகவும், பல விவசாயிகளுக்கு கடன் தொகையைக் குறைத்து வழங்குவதாகவும், கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கூடுதலாகக் கணக்கில் காட்டுவதற்காக வங்கிகள் இந்த முறையைக் கடைப்பிடிப்பதாகவும் விவசாயிகள் குறை கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறியது:
பயிர்க் கடன் கேட்டு கூட்டுறவு வங்கிகளை நாடும் போது, சில வங்கிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொடுக்க மறுக்கின்றன. இதற்கு, போதிய நிதியாதாரம் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். கூட்டுறவு வங்கிகள் கடன் அளிக்க யோசிக்கும் போது, விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நாட வேண்டியுள்ளது.
ஆனால், அந்த வங்கிகள் நெல் பயிருக்கு கடன் அளிக்க ஆர்வம் காட்டுவதில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டு நிதி சுழற்சியில் 18 சதம் வேளாண் கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. எத்தனை வங்கிகள் இந்த விதியைப் பின்பற்றுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.
எனவே, ஒவ்வொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியும் ஆண்டு இறுதியில் எந்தப் பயிருக்கு எவ்வளவு கடன் வழங்கியுள்ளது, மொத்தக் கடன் தொகை எவ்வளவு என்பதை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார் சுந்தரவிமலநாதன்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவாஜி கூறியது: அரசு நிர்ணயித்தப்படி பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. சில இடங்களில் கடன் தொகையைக் குறைத்து வழங்குவதாக வந்த புகார்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. கடன் வழங்கப்பட்ட தொகையை வசூலித்து, மறுசுழற்சி செய்வதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு | 70 கோடி என்ற இலக்குக்கு அதிகமாக | 81.40 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. ஆனால், 44 சதம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. நிகழாண்டு பயிர்க் கடனாக | 95 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை | 43.42 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாகுபடிப் பணி தீவிரம் அடையும் என்பதால், 90 சதம் கடன் கொடுக்கப்பட்டுவிடும். அதற்கான நிதி ஆதாரங்கள் இருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்தது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தள்ளுபடியான தொகை | 179 கோடியாகும். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு கடன் வாங்கிய பெரும்பாலான விவசாயிகள் திரும்பச் செலுத்தவில்லை. இருப்பினும், அரசு நிர்ணயித்த தொகையும், பயிர்க் கடன் இலக்குத் தொகையும் வழங்கப்படும் என்றார் சிவாஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

