"மூலப் பொருள்களின் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு போன்றவை ஒரு புறமிருக்க, உருண்டை வெல்லத்தை பொங்கல் பண்டிகைக்காக அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்வதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று வெல்லம் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலை பொங்கல் பண்டிகை வரை குறைய வாய்ப்பில்லை என்ற போதிலும், மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது' என வியாபாரிகள் கூறினர். இதேபோல, பொங்கலுக்காகப் பயன்படுத்தப்படும் பச்சரிசியின் விலையும் கடந்த சில நாள்களாக உயரத் தொடங்கியுள்ளது. அரிசி, வெல்லத்தைப் போன்று பாசிப் பருப்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, பாமாயில் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளன.