எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மத்திய மண்டல காவலர்களுக்கான குறைகேட்பு முகாம் நடத்தப்படுமா?

திருச்சி, ஜூலை 27: மத்திய மண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் குறைகளை கேட்டறியும் வகையில் குறைகேட்பு முகாம் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:53 pm

தி. இன்பராஜ்

திருச்சி, ஜூலை 27: மத்திய மண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் குறைகளை கேட்டறியும் வகையில் குறைகேட்பு முகாம் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

   தமிழகத்தில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 609 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் காவலர்கள் உள்ளனர். 42,979 பேருக்கு ஒரு காவல் நிலையம் என்ற அளவில் காவல் நிலையங்கள் உள்ளன.

  மாநிலம் முழுவதும் 1,03,843 காவலர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 88,672 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 196 மகளிர் காவல் நிலையங்களும், 1,258 பொது காவல் நிலையங்களும் உள்ளன.  

  தமிழகத்தில் உள்ள காவலர்களின் குறைகளைக் கேட்கும் வகையில் சில உத்தரவுகளை அரசு வழங்கியுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகங்களில் வாரம் ஒருமுறை காவலர்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

  மேலும், தமிழக காவல் துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், ஐ.ஜி. மற்றும் ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், டி.ஐ.ஜி. பொறுப்பில் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும் முகாம்கள் நடத்தி காவலர்களிடம் குறைகளைக் கேட்க வேண்டும் என்பதும் அரசின் உத்தரவு.

  ஆனால், காவல் துறையில் பணிபுரிவோருக்கான குறைகேட்பு முகாம்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மண்டல காவலர்களுக்கான குறைகேட்பு முகாம் மதுரையில் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் லத்திகா சரண் பங்கேற்று காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

   திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் ஏறத்தாழ 15,000-க்கும் அதிகமான காவலர்கள் பணியாற்றி வருகிறன்றனர்.

  பணிச்சுமை, அதிகாரிகளின் தகாத பேச்சுகள், குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை, மருத்துவ வசதி சரியாக கிடைக்கவில்லை, விடுமுறை இல்லாததால், குடும்பத்தைச் சரியாக கவனிக்க முடியவில்லை என பல்வேறு காரணங்களால் தாங்கள் மன உளைச்சலில் காணப்படுவதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர்.   மேலும், குறிப்பிட்ட சில அதிகாரிகளால் தங்கள் மீது எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து மீண்டு வருவதில் பல பிரச்னைகள் இருப்பதாகவும் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

  சாதாரண மக்களுக்கு உள்ளது போல தங்களுக்கும் பல்வேறு குறைகள் இருக்கிறது என்பது காவலர்களின் கூற்று. பொதுமக்களின் பிரச்னைகளுக்காக நாங்கள் பயன்படுத்தப்படும்போது எங்களது குறைகளைக் கேட்க காவல் துறை நிர்வாகம் சரியாக முன்வருவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட காவலர்கள்.

  மேலும், தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகள் பற்றி மாவட்ட, மாநகர அதிகாரிகளிடம் கூறும்போது அவர்கள் சரியாக கண்டுகொள்வதில்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு.

  சில உயர் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி எங்களால் வெளியே கூற முடியவில்லை. தங்களுக்கு அந்த அதிகாரியால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், சகிப்புத் தன்மையோடு வேலை பார்ப்பதாகவும் நேர்மையான காவலர்களில் சிலர் கூறுகின்றனர்.

 மேலும், சென்னை சென்று தங்களது குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஓரிருநாள் கிடைக்கும் விடுமுறையில் குடும்பத்தினருடன் இருக்கவே சரியாக இருக்கிறது என்கின்றனர் காவலர்கள்.    எனவே, தங்களது மனதுக்குள் இருக்கும் குறைகளை வெளிப்படையாக அதிகாரிகளிடம் கூறும் வகையில் உடனடியாக குறைகேட்பு முகாமை நடத்த வேண்டும் என்கின்றனர் மத்திய மண்டல காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.