இதனால், ஒவ்வொரு அலுவலகத்துக்கும், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே சென்று, அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்ததால், அனைத்து அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பேருந்து, லாரி, வேன், டாக்ஸி, மேக்ஸி வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள், பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் பாதிப்படைவதுடன், விவசாயத் துறையில் பதிவு செய்யப்பட்ட டிராக்டர் வரியின்மைச் சான்று பெறுவது, உரிமத்தைப் புத்துப்பித்தல், வரியின்மைச் சான்று பெயர் மாற்றம், தாற்காலிக உரிமத்தைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் காலதாமதம் ஏற்படுகிறது.