திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

திருவையாறு புதிய பேருந்து நிலையம் திறப்பது எப்போது?

 தஞ்சாவூர், ஜூலை 2: திருவையாறில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூலை 3) திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.   திருவையா

Updated On :20 செப்டம்பர் 2012, 11:09 am

 தஞ்சாவூர், ஜூலை 2: திருவையாறில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூலை 3) திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.

  திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை மிகவும் பிரசித்தி பெற்றது.

   திருவையாறில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவெடித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கின. இதையடுத்து, பல்வேறு ஊர்களிலிருந்தும் வரும் பேருந்துகளுக்கென தனித் தனி பேருந்து நிறுத்தங்கள் தாற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன. இதனால், பயணிகள் அங்குமிங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

   இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் அனைத்தும் சுமார் 2 மாதங்களுக்கு முன் நிறைவடைந்து, வணிகக் கடைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன. ஆனால், பேருந்து நிலையம் இன்று வரை திறக்கப்படவில்லை.

  இதனால், கடைகளை ஏலம் எடுத்தவர்கள் தாங்கள் செலுத்திய தொகைக்கு வட்டி அளிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

   பேருந்து நிலையத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பதாகவும், அவரது தேதி கிடைக்காததால்தான் தாமதம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

   திருவையாறு சாலையில் இருபுறமும் கடைகள், வீடுகள் இருப்பதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்நிலையில், தாற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாலும், மினி பேருந்துகள் அங்குமிங்கும் நிற்பதாலும் நெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது. எனவே, முற்றிலும் பணி முடிந்து விட்ட பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

   துணை முதல்வர்தான் திறந்துவைக்க வேண்டுமென்றால், கடந்த மாதத்துக்கு முன் தஞ்சாவூர், கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த போது திறந்துவைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். செம்மொழி மாநாட்டுப் பணி காரணமாக வரமுடியவில்லையென்றாலும் கூட, குறைந்தபட்சம் விடியோ கான்பரன்ஸிங் மூலமாவது திறந்து வைத்திருக்கலாம்.

  இந்நிலையில் துணை முதல்வரின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், கும்பகோணத்தில் சனிக்கிழமை (ஜூலை 3) நடைபெறவுள்ள ஜி.கே. மூப்பனார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவையாறு பேருந்து நிலையத்தை திறந்து வைப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.