ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுகாதாரச் சீர்கேட்டில் திருவெறும்பூர் ரயில் நிலையம்

திருவெறும்பூர், டிச. 5:   திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.    தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பது திருச்சி மாவ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:26 pm

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், டிச. 5:   திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

   தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பது திருச்சி மாவட்டம். இந்த மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகிப்பதும், திருச்சியில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதும் திருவெறும்பூர்.

  இப் பகுதியில் பொதுத் துறை நிறுவனமான பெல், துப்பாக்கித் தொழில் சாலை, 500-க்கும் மேற்பட்ட தனியார் தொழில்சாலைகள், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பேன்ற  நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

   திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை, மைசூர், ஈரோடு, சேலம், கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன.   ஆனால், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

   ரயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே இருபுறமும் இறைச்சிக் கடைகள் உள்ளதாலும், திருவெறும்பூர் பகுதி கழிவுநீர்க் கால்வாய்கள் இந்த ரயில் நிலையத்தின் அருகிலேயே செல்வதாலும் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகளும், குப்பைகளும் தண்டவாளத்திலேயே கொட்டப்படுகின்றன.

    ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நடைமேடையில் கட்டப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. நடைமேடையிலுள்ள மின் கம்பத்தின் வயர்கள் இணைக்கப்பட்டு பாதுகாப்பாக இல்லாததால், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

   இந்த பிரச்னைகள் குறித்து பொதுமக்களும் பல முறை ரயில்வே நிர்வாகத்திடம் புகார் கூறியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

   இதுகுறித்து பயணிகள் கூறியது:

    பெல் நிறுவனம், துப்பாக்கி தொழில்சாலை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களைச் சேர்ந்தோரும், பொதுமக்களும் இந்த ரயில் நிலையத்துக்கு வர வேண்டுமென்றால் கழிவு நீ செல்லும் சாலையைக் கடந்துதான் வர வேண்டும். இப்படி வருவோரின் கால்களில் கழிவுநீர் பட்டு அரிப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த ரயில் நிலையத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. கழிவறைகள் திறக்கப்படாமல் உள்ளதால், பெண்களும், குழந்தைகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நடைமேடையில் போதிய குடிநீர் வசதியும், அமருவதற்கு இருக்கைகளும் கிடையாது. தண்டவாளத்தின் இரண்டு புறமும் முள்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன.

  இதை அகற்றக் கோரி பல முறை ரயில் நிலைய அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

   எனவே, ரயில்வே நிர்வாகம் திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.