கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு குறைந்தது 100 நாள்கள் பணி உத்தரவாதத்துடன் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம். இதில் பணிபுரிபவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள்தான். இந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்காக ஊராட்சி நிர்வாகம் வருகைப் பதிவேட்டைப் பராமரிப்பதோடு, அடையாள அட்டையையும் வழங்கியுள்ளது. மேலும், வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, கூலித் தொகையை அதில் செலுத்தி, சேமிக்கும் பழக்கமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறங்களில் புதிதாகச் சாலைகள் அமைத்தல், ஏரி, குளங்களைச் சீரமைத்தல், ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணியாற்றுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு | 80 ஊதியமாக வழங்கப்பட்டது.