தஞ்சாவூர், ஆக. 12: தஞ்சாவூரில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தஞ்சாவூர் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வல்லம், நாஞ்சிக்கோட்டை, கரந்தை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகள் வரை சுமார் 40-க்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வகை ஆட்டோக்களில் குறைந்தபட்சம் 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்லாம். ஆனால், நகரில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
ஆட்டோவில் நடத்துநராகப் பணியாற்றுபவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து பயணிகளிடம் பயணச் சீட்டை கொடுப்பதில்லை. மாறாக, ஆட்டோ கதவுகளைத் திறந்துவிட்டு, அதில் அமர்ந்து கொண்டு செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதுடன், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
தவிர, சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது, சாலையோரத்தில் நிற்கும் பயணிகள் நிறுத்துமாறு சைகை செய்தால், சூழ்நிலையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உடனடியாக நிறுத்தும் போக்கால், ஆட்டோவை பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் ஆட்டோவிலோ அல்லது வேறு வாகனத்திலோ மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
மேலும், சாலையில் இயக்கத் தகுதியில்லாத சில ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. கரும்புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் ஆட்டோக்களை பின்தொடர்ந்து செல்வோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்டுகின்றனர். ஆனால், பொதுமக்களின் வேதனையைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை.
எனவே, வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் ஷேர் ஆட்டோக்களின் தகுதியைப் பரிசோதித்து, இயக்கத் தகுதியில்லாதவற்றைத் தடை செய்ய வேண்டும். இந்த ஷேர் ஆட்டோக்களை இயக்குவதற்கென காவல் துறையினர் ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர், நடத்துநர்களை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதன்மூலம், விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், பயணிகளும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். அதேவேளையில், அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களையும் ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

