திருச்சி, ஏப். 15: முழுமையான கல்வி, பெண்களின் முன்னேற்றம், குழந்தைகள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை முழுமையாகத் தத்தெடுக்கிறது தமிழ்நாடு சமூக நல வாரியம்.
தமிழகத்தில் சமூக நலத் துறையின் பல்வேறு நலத் திட்டங்கள் பெண்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சமூக நல வாரியம் மூலமாகவும் பெண்களின் முன்னேற்றம், கல்வி மேம்பாடுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கான காப்பகம் அமைத்தல், பெண்களுக்கான தங்கும் விடுதிகள், குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான ஆலோசனை மையங்கள், கிராமப்புறங்களில் கல்வியறிவு இல்லாத பெண்களுக்கு கல்வியறிவு வழங்கும் வகையிலான திட்டம் எனப் பல்வேறு வகையான திட்டங்கள் சமூக நல வாரியம் மூலம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசால் இந்த வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாவட்டந்தோறும் சமூக நல வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மாவட்டங்களில் சிறந்து விளங்கும் தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய சமூக நல வாரியத்தின் நிறுவனரும், சமூக சேவகியுமான டாக்டர் துர்காபாய் தேஷ்முக்கின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக, தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை முழுமையாகத் தத்தெடுக்கிறது மாநில சமூக நல வாரியம்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்திலிருந்து இந்தக் கிராமம் தேர்ந்தெடுக்கப்படும். இந்தக் கிராமத்தில் சமூக நல வாரியத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
"கிராமத்தைத் தத்தெடுப்பதற்கு தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கிராமத்தில் பணிகளை மேற்கொள்ள நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய சமூக நல வாரியத்திடம் கோரியுள்ளோம்.
பெண்களின் முன்னேற்றம், அனைவருக்கும் முழுமையான கல்வி, குழந்தைகள், பெண்களின் உடல்நலன் ஆகியன குறித்து கிராமத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கிராமத் தத்தெடுப்பின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
இதுமட்டுமன்றி பெண் குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டுக்கு என்னென்ன தேவை, கிராம முன்னேற்றத்துக்கு மேலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆராய்ந்து படிப்படியாக அவை மேற்கொள்ளப்படும்' என்கிறார் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி கவிஞர் சல்மா என்ற ரொக்கையா மாலிக். அவர் மேலும் கூறியது:
சமூக நல வாரியம் மட்டுமல்லாது, பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியையும் பெற்று நாங்கள் தத்தெடுக்கும் கிராமத்தில் கூடுதல் நலத் திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கிராமங்களில் நலத் திட்டங்களை மேற்கொண்டு வருவதால், சமூக நல வாரியத்துடன் இணைந்து செயல்படுவதில் அவர்களுக்கு எவ்விதச் சிக்கலும் இருக்காது.
அரவானிகளுக்கான ஆலோசனை மையங்களைத் திறந்து செயல்படுத்தியது, ஆதரவற்ற பெண்களுக்கான கணினிப் பயிற்சி, திருச்சியில் மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களைத் திறந்தது ஆகியவை எங்களது வாரியத்தின் செயல்பாடுகளில் குறிப்பிட்டத்தக்கவை.
அந்த வகையில், கிராமத் தத்தெடுப்புத் திட்டமும் சிறப்பு பெறும் என்றார் சல்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

