தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இரு மாதங்களாக ஊதியமின்றித் தவிக்கும் வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள்

திருச்சி, நவ. 29:   கடனை அரசு தள்ளுபடி செய்து விடும் என்ற நம்பிக்கையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள், கடன் தொகையைச் செலுத்துவதில் சுணக்கம் காட்டுவதால், கடந்த 2 மாதங்களாக ஊதியம்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:29 pm

கு. வைத்திலிங்கம்

திருச்சி, நவ. 29:   கடனை அரசு தள்ளுபடி செய்து விடும் என்ற நம்பிக்கையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள், கடன் தொகையைச் செலுத்துவதில் சுணக்கம் காட்டுவதால், கடந்த 2 மாதங்களாக ஊதியம் பெற முடியாமல் உள்ளனர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள்.

  தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் கீழ், மாநிலத்தில் வட்டார அளவில் 198-ம், நகர அளவில் 800-க்கும் அதிகமான கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு அவர்களின் வருமானத்தைக் கணக்கில் கொண்டு, உரிய ஆவணங்கள் பெறப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோல, பொதுமக்களுக்கும்

அவர்களுடைய வீடு அல்லது நிலத்தை அடமானமாகப் பெற்று, ரூ. 7 லட்சம் வரை இந்தச் சங்கங்கள் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன.

  வீட்டு வசதி சங்கங்களில் வழங்கப்பட்ட கடன்களை வசூல் செய்வதற்காக, அரசு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வந்தது. ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை வீட்டு வசதிக் கடன் பெற்றிருந்தவர்களுக்காக, அவர்களின் கடன் தொகையை வைத்து 10 சதம் முதல் 50 சதம் வரை கடனில் தள்ளுபடி வழங்கப்பட்டதால், பல இடங்களில் கடன் பெற்றவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தி வந்தனர்.

  மற்ற துறைகளில் உள்ளது போல் இல்லாமல், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பணியாற்றுபவர்கள், தங்களது வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகையை வசூலிக்கும் போது, அந்தத் தொகையில் ஒரு சதத் தொகையை ஊதியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறைதான் இதுவரை இருந்து வருகிறது.

  இந்த நிலையில், 2008, மார்ச் 31 ஆம் தேதி நிலுவையில் ரூ. 25,000-க்கு கீழ்

பெறப்பட்டிருந்த வீட்டு வசதிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வகையில் ரூ. 658 கோடி வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

  இதனால் ஏற்பட்ட நிதி இழப்புகளால் வட்டார அளவில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்ட கடன் தொகையை வசூலிக்க அதிகாரிகள்

சென்றால், ரூ. 25,000-க்கு கீழ் பெறப்பட்ட கடன்களை அரசு தள்ளுபடி செய்தது போல, எங்களது கடனையும் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் கடன் பெற்றவர்கள் இருப்பதால், தொகையைச் செலுத்துவதற்கு யாரும் முனைப்புக் காட்டுவதில்லை.

  இந்த வகையில் மாநிலம் முழுவதுமிருந்து சுமார் ரூ. 2,000 கோடி கடன் தொகை திரும்ப வசூலாகாமல் இருக்கிறது என்

கின்றனர் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்க

அலுவலர்கள்.

  ஆனால், கடன் வழங்கியது நீங்கள்தான். எனவே, வழங்கிய கடன் தொகையை வசூல் செய்து அதிலிருந்து உங்கள் ஊதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அரசு கூறியதால், கடந்த 2 மாதங்களாக ஊதியம் பெற முடியாமல் மாநிலம் முழுவதும் சுமார் 3,000-க்கும் அதிகமான கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  மேலும், நீண்ட நாள்களாக வராமல் இருக்கும் கடன்களை வசூலிக்க ஏலம் நடத்தலாம் என்றால், அங்கு அரசியல் தலையீடு அதிகம் இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்கின்றனர் வீட்டு வசதி சங்க அலுவலர்கள்.

  "தள்ளுபடி அறிவிப்பால் ஏற்பட்ட இழப்புத் தொகையை அந்தந்தச் சங்கங்களுக்கு வழங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தள்ளுபடிகளால் கடன் நிலுவை குறைந்துவிட்டதை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உண்ணாவிரதம் நடத்திவிட்டோம். விரைவில் சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்   என்றார் திருச்சி மண்டல வட்டக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் டி. சண்முகம்.

  அரசு தள்ளுபடி போன்ற எந்தவிதமான முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும். ஆனால், சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலன்களையும் காக்க முன்வர வேண்டும் என்பது கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.