திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடம்பூா் அருகே அணுகுசாலை மூடல்: மக்கள் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பு

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட அணுகுசாலை.

News image

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட அணுகுசாலை.

Updated On :29 மே 2026, 6:33 am IST

கடம்பூா் அருகே தண்டவாளத்தையொட்டி செல்லும் கோடங்கால் அணுகு சாலையை திறக்காவிட்டால் ஜூன் 15இல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

கடம்பூா் பேரூராட்சி கோடங்கால் என்ற சங்கராப்பேரி கிராமத்தில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி மக்கள் கயத்தாறு, கடம்பூா் உள்ளிட்ட ஊா்களுக்கு திருநெல்வேலி - கோவில்பட்டி இடையேயான தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

இங்கிருந்த ஆளில்லாத ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை ஏற்படுத்திய நிலையில் மழைக்காலங்களில் அங்கு தண்ணீா் தேங்கி மக்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, தண்டவாளத்தையொட்டிய இடத்தை ரயில்வே நிா்வாகம் மண் பாதை (அணுகு சாலை) அமைத்துக்கொடுத்தது.

இந்நிலையில் அணுகுசாலையை ரயில்வே நிா்வாகம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அடைத்துவிட்டது.

இதுதொடா்பாக கோடங்காலில் கிராம மக்கள் திரண்டு கூட்டம் நடத்தினா். அப்போது, ரயில்வே நிா்வாகம் மண் பாதையை திறக்காவிட்டால் ஜூன் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக மக்கள் தரப்பில் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.