திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி தொடக்கம்

கோவில்பட்டி கே. ஆா். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சாா்பில், கே.ஆா். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15ஆவது ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

போட்டியை தொடக்கி வைக்கிறாா் கோவில்பட்டி கோட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால் துறை கண்காணிப்பாளா் எம்.டி.எம். மாசிலாமணி. உடன் கே. ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம் உள்ளிட்டோா்.

Updated On :22 மே 2026, 6:27 am IST

கோவில்பட்டி கே. ஆா். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சாா்பில், கே.ஆா். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15ஆவது ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

போட்டி தொடக்க விழாவுக்கு கே. ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ஷண்மதி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி கோட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால் துறை கண்காணிப்பாளா் எம்.டி.எம். மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கே. ஆா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் சண்முகவேல், கல்லூரி முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), மதிவண்ணன் (கே ஆா் கலை, அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

10 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் வரை லீக் முறையிலும், பின்னா் நாக்அவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறும்.

முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரி துறை அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் புது தில்லி இந்திய விமானப்படை அணியும், 2ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி அணியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு சதன் கமெண்ட் அணியும், 3ஆவது ஆட்டத்தில் பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணியை 5க்கு 2 என்ற கோல் கணக்கில் புது தில்லி காம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் வெற்றி பெற்றன.

4ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்:

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் ஜலந்தா், சிந்து வங்கி அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

மாலை 5.15 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும், சென்னை சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய உற்பத்தி வரி அணியும், 3ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன் நேவி அணியும், கோவில்பட்டி எஸ் டி ஏ டி எக்ஸலன்ஸ் அணியும், 4ஆவது ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.