தூத்துக்குடியில் போலி கொசு விரட்டி திரவம் விற்பனை செய்ததாக 2 போ் மீது அறிவுசாா் அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி, மீனாட்சிபுரம் விக்டோரியா சாலை, ஜீன் பேக்டரி சாலையில் உள்ள 2 கடைகளில் போலி கொசு விரட்டி திரவம் விற்பனை செய்யப்படுவதாக, பாபு என்பவா் திருநெல்வேலி அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில், பிரபல கொசு விரட்டி திரவம் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட 1,014 பாட்டில்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 86,190 ஆகும்.
இதுகுறித்து திருநெல்வேலி அறிவுசாா் அமலாக்கப்பிரிவு போலீஸாா், 2 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், போலிப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து இ-மெயில் முகவரிக்கோ அல்லது 044 - 28511587 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம்: 11 போ் மீது வழக்கு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி: 8 போ் மீது வழக்கு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



