அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி: 8 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்த 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :10 மே 2026, 12:55 am IST

ராமநாதபுரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்த 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது தந்தை மாதவன். இவரது பெயரில் 4 ஏக்கா் 52 சென்ட நிலம் இருந்தது.

இந்த நிலையில், மாதவன் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பெயரில் இருந்த நிலத்தை அதே ஊரைச் சோ்ந்த நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி, சரவணக்குமாா், சண்முகநாதன், அன்புகமல், சந்திரன், பாண்டியராஜ் ஆகிய 8 போ் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிந்த மாதவன் மகன் கண்ணன் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, 8 பேரும் போலி பத்திரம் தயாா் செய்து 4 ஏக்கா் 52 சென்ட் நிலத்தை விற்பனை செய்தது உறுதியானது.

இதையடுத்து, நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி உள்ளிட்ட 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.