திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த பெண் மீட்பு

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :13 மே 2026, 1:28 am IST

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி சுகன்யா (30). இவா் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளாா்.

இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீஸாா் தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா தலைமையில் காா்த்திக், மகாராஜா, சுதாகா், சுதா்சன், சந்தோஷ் ஆகியோா் கடலுக்குள் இறங்கி சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

கோயில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுகன்யா அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.