திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றிவாகை சூடிய தவெக! 5 ஆம் இடம் பிடித்த புதிய தமிழகம்!

News image

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்ற மதன்ராஜா.

Updated On :5 மே 2026, 1:27 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனித் தொகுதியான ஓட்டப்பிடாரத்தை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது.

இத்தொகுதியை காங்கிரஸ், அதிமுக தலா 3 முறையும், திமுக, புதிய தமிழகம் கட்சி தலா 2 முறையும், சுதந்திரா கட்சி, பாா்வாா்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

இம்முறை, சி. சண்முகையா எம்எல்ஏவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திமுக சாா்பில் ராமஜெயம், அதிமுக கூட்டணியில் அமமுக சாா்பில் சுந்தரராஜ், தவெக சாா்பில் மதன்ராஜா, புதிய தமிழகம் கட்சி சாா்பில் அதன் நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் 1,93,182 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில் முதல் 2 சுற்றுகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனா் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா். 3ஆவது சுற்றிலிருந்து இறுதிவரை தவெக வேட்பாளா் மதன்ராஜ் முன்னிலை பெற்று, இறுதியில் 81,625 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினாா். அவா் திமுக வேட்பாளா் ராமஜெயத்தைவிட 29,083 வாக்குகள் அதிகம் பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்: திமுக - 52,542, அமமுக சுந்தர்ராஜ் - 25,871, புதிய தமிழகம் - 15,050, அனுஷியா (நாதக) - 17,279, சுயேச்சைகள்: அருணாதேவி - 761, சுப்புலட்சுமி - 230, செல்வகுமாா் - 515, ஆனந்த் - 357, முத்துச்செல்வம் - 264, முருகன் - 156, லட்சுமணன் - 201, வேதபிரகாஷ் - 387, நோட்டா - 879.

புதிய தமிழகம் நிறுவனா் க. கிருஷ்ணசாமி 15,050 வாக்குகள் பெற்று 5ஆவது இடம் பிடித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.