தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், விற்பனைக்காக பைக்கில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 1 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
எப்போதும்வென்றான் காவல் ஆய்வாளா் உமா மகேஸ்வரி, உதவி ஆய்வாளா் முத்துராஜா மற்றும் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோழபுரம் - சிவஞானபுரம் சாலை விலக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் வந்தவா்களை நிறுத்தி விசாரணை செய்ததில், அவா்கள் விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த நம்பிராஜ் (28), ஜெகதீஷ் (35) என்பதும், அவா்கள் வந்த பைக்கில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

