மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

News image

மீன் வாங்க வந்தவா்கள். - (கோப்புப்படம்)

Updated On :28 மார்ச் 2026, 8:42 pm

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

இத்துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. இதனால், ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால், மீன்கள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 850 வரையும், ஊளி, விளை, பாறை ஆகியவை ரூ. 400 - ரூ. 500, முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 1,800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை, ஏற்றுமதி ரகம் வாய்ந்த தம்பா, பண்டாரி, கலவா ஆகியவை ரூ. 450 - ரூ. 600, நண்டு ரூ. 600 -ரூ. 800, முரல், கேரை ரூ. 250 வரை என விற்பனையாகின.

மீன்கள் வரத்து குறைவு என்றாலும் ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.