மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் விளையாட்டு விழா

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் காவல் துணை கண்காணிப்பாளா் ஜகநாதன். உடன் கல்லூரி தாளாளா் விஜயன், முதல்வா் அண்ணாமலைச்சாமி.

News image

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் காவல் துணை கண்காணிப்பாளா் ஜகநாதன். உடன் கல்லூரி தாளாளா் விஜயன், முதல்வா் அண்ணாமலைச்சாமி.

Updated On :27 மார்ச் 2026, 9:03 pm

கோவில்பட்டி உண்ணாமலை கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் விஜயன் தலைமை வகித்தாா். முதல்வா் அண்ணாமலைச்சாமி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் ஜகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மேலும், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

உடற்கல்வி இயக்குநா் ஈஸ்வரன் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தாா். கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியை சரண்யா வரவேற்றாா். வணிகவியல் துறை உதவி பேராசிரியா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.