மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

News image

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 11:51 pm

தமிழக மீன்வளம் - மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா், சகோதரா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரின் மூன்று மகன்களில் அனந்தபத்மநாபன், அனந்தராமகிருஷ்ணன் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் முன்னிலையாகவில்லை. அதையடுத்து, மாவட்ட நீதிபதி வசந்தி வழக்கை விசாரித்து, விசாரணையை ஏப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.